Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக அரசு மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை செயல்படும். தற்போது நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் டாஸ்மார்க் கடைகள் வழக்கம் போல பகல் 12 மணிக்கு திறக்கப்படும். ஆனால் இரவில் ஒரு மணி நேரம் முன்னதாக 9 மணிக்கு அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மார்க் கடைகள் செயல்படாது எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |