Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : டெல்லியில் ஒரு வாரம் எல்லைகள் மூடப்படும் – முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு!

கொரோனா தாக்கத்தால் டெல்லியில் ஒருவாரத்துக்கு எல்லைகள் மூடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆட்டோ, இ-ரிக்‌ஷாக்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். முன்னதாக ஓட்டுனருடன் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் டெல்லியில் சந்தைகள், சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுளது. அனைத்து தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி அளிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் டெல்லி 2ம் இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் 10.61% பேர் டெல்லியில் உள்ளனர். கடந்த 4 நாட்களாக 1,000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் கொரோனா எண்ணிக்கை உயர்வது குறித்து கவலைப்பட வேண்டாம். அரசிடம் போதிய முன்னேற்பாடுகள் உள்ளன என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்கு பின்னர் எல்லையை திறப்பதா? அல்லது நீடிக்கலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |