டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தனியார் அலுவலகங்களை உடனடியாக மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி கொரோனா தொற்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரேன் எனப்படும் மாறுபட்ட கொரோனா இரண்டும் சேர்ந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி 22 ஆயிரம் என்ற அளவில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் முக்கியமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களையும் உடனடியாக மூட வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பணியாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.