நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரிகளில் கொரோனா பரவுவதை தொடர்ந்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், கல்லூரிக் கல்வி இயக்கக இயக்குனர், தொழில்நுட்ப கல்வி இயக்கக இயக்குனர் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.