Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. தமிழகத்தில் மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்…. அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன….?

தமிழகம், கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் திருவனந்தபுரம் போன்ற தலைநகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுப்பதே பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனாபரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் நோய் பரவல் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் 95 பேர், திருவள்ளூரில் 33,காஞ்சிபுரத்தில் 30 மற்றும் செங்கல்பட்டில் புதிதாக 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் தொற்றுகண்டறியப்பட்டு வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதல் கட்டமாக நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இனி வரும் நாட்களில் சுகாதாரத் துறை சார்பாக வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |