Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு?….. அரசின் முடிவு என்ன….????

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் மேல் பதிவாக்கி வருவதை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 476 ஆக உயர்ந்த நிலையில், சென்னையில் மட்டும் 221 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் உடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நடத்திய ஆலோசனையில், சென்னையில் மட்டும் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தினால் மற்ற பகுதிகளில் பரவாமல் இருக்கும் என ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் மக்கள் சரியாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் தொற்று பாதிப்பிலிருந்து மீளலாம்.

Categories

Tech |