தமிழகம் முழுவதும் 800 க்கும் அதிகமான கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு பொரோனோ பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருந்தது போலவே ஒரு நாம் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 800 க்கும் அதிகமான கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்படும் என்றும் வேண்டிய பொருள்கள் வீட்டிற்கு வந்து வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் செங்கல்பட்டு, கோவை, திருவாரூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களும் கொரோனா பாதிப்பு அதிகம் பரவும் அபாயத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.