Categories
மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. தமிழகம் முழுவதும்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த சில தினங்களாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பி ஏ.4, பி ஏ 5: வகை புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அது தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை தொற்று தீவிர பாதிப்பு இல்லை என்றாலும் அதனை ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டும். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருவள்ளூர், மதுரை, ஈரோடு, தஞ்சாவூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய் தடுப்பு விதிகளை முறையாக கடைபிடித்தால், பரி சோதனை நடவடிக்கைகள், சிகிச்சை நடைமுறைகள், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட உத்திகளை கையாளுவதை மாவட்ட நிர்வாகங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி தடுப்பூசி முகாம் களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும். இதில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |