தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை,செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருவதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம் என்பது குறித்து விரைவில் அரசு ஆலோசிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இதுகுறித்து வெளியிடப்படவில்லை. மக்கள் அனைவரும் சரியாக முகக்கவசம் அணிந்து ஒரு வழிகாட்டு நெறி முறைகளை கடை பிடித்தால் மட்டும் போதும் என தொடர்ந்து அரசு அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.