Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: திருப்பதியில் டிக்கெட் விற்பனை குறைப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக திருப்பதியில் சாமி தரிசனத்திற்கான இலவச டிக்கெட் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வரும் நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தினசரி வழங்கப்படும் சுவாமி தரிசன இலவச டிக்கெட் 25 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |