உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு மற்றும் முக கவசம் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுபா ரெட்டி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.