நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் போன்றவை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜனவரி 30ஆம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக இன்று வரை கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.