Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி… மீண்டும் விமான சேவை ரத்து… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் அனைத்தும் நாளை முதல் டிசம்பர் 31 வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டன. விமான சேவையும் மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. அண்மையில் சர்வதேச விமான சேவைகள் அரசின் வழிகாட்டுதலின்படி இயக்கப்பட்டன. இந்நிலையில் இங்கிலாந்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக இன்று நள்ளிரவு முதல் இங்கிலாந்து செல்லும் சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக கனடா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |