Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. மீண்டும் முழு ஊரடங்கு…. அடுத்தடுத்த அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு மாநிலங்களும் முழு ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றன. ஹரியானா மாநிலத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஒடிசாவில் மே 5-ஆம் தேதி முதல் 15 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை வெட்டி இருப்பதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என அச்சம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |