நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் பீட் மாவட்டத்தில் தோற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மார்ச் 26 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொது இடங்களில் கூடவும், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள் ஆகிய பொது இடங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.