நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக குறையாததால் யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎல், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சி பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகள் ஜூன் 27ஆம் தேதி அன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.