சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கறிஞர்கள், அதிகாரிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் . கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் .வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் வழக்காடிகள் தவிர மற்றவர்கள்உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories