Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. 104 விமானங்கள் திடீர் ரத்து…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக உணவு ஊரடங்கு அமலில் இருப்பதால் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 104 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 50 விமானங்கள் சென்னையிலிருந்து புறப்படுபவை. 54 விமானங்கள் சென்னைக்கு வரும் விமானங்கள். மேலும் உள்நாட்டு விமான நிலையத்தில் 99 விமானங்கள், சர்வதேச விமான நிலையத்தில் 3 வந்தே பாரத் விமானங்கள் உட்பட 10 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

Categories

Tech |