நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பெற்றோர்கள் கருத்து கேட்பிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்று தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டது.
ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே மூன்றாம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளது. இதனால் தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தள்ளி போகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக பிளஸ் டூ மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு வலியுறுத்தியுள்ளது.