தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதுமட்டுமன்றி உருமாறிய கொரோனா வைரஸ் மொத்தம் 18 மாநிலங்களில் பரவியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதன் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோன அதிகம் பரவும் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை 72 மணி நேரத்தில் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.