நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000 நெருங்கியதால் கொரோனா நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் எதிரொலியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 சாலைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி களியக்காவிளை மார்க்கெட் ரோடு, பனங்காலை ரோடு, குளப்புறம் கடுவாகுலி ரோடு உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.