இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் இன்று இரவு 10 மணி முதல் 26ம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கின் போது மருந்தகங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், பெட்ரோல் பங்க், விவசாயம் சார்ந்த பணிகள் மற்றும் வீடுகளுக்கு உணவு டெலிவிரி ஆகியவை அனுமதிக்கப்படும். மேலும் அத்தியாவசிய பணியில் இருப்போர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.