வடகொரியாவில் கொரோனா வைரஸ் பெரும் தொற்று காரணமாக கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே மக்களுக்கு பசியை போக்க மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.
உலக நாடுகளில் தற்போது பொருளாதார தடை மற்றும் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வரும் வடகொரியா, பட்டினியால் கஷ்டப்படும் மக்களுக்கு கொடுத்த அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நடத்திய அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு ஐ.நா. பொருளாதார தடை விதித்திருக்கிறது. அமெரிக்காவுடன் இரண்டு முறை முக்கிய பிரச்சனையில் ஈடுபட்டிருந்தாலும், தடையை நீக்குவதற்கு அவர்கள் வராத காரணத்தால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டிரம்ப்-கிம் ஜாங் இவர்களின் சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளது. இப்போது உள்ள நிலையில் கொரோனா பரவலால் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், வடகொரியாவில் உணவு இல்லாமை காணப்படுகிறது. பசியால் கடும் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு வடகொரிய நிர்வாகமானது, ஒருவகை ஆமையை உணவாக உட்கொள்ள அறிவுறுத்திவருகிறது.
அது மட்டுமில்லாமல் அங்கிருக்கும் விஞ்ஞானிகள் குழு, பசியை போக்க மருந்து கண்டு பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகம் ஒன்றில் அரிசி, சோளம், பழம், இறைச்சி மற்றும் மீன் இவைகள் இல்லாத நேரத்தில் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. மேலும் அதில், பழங்காலத்தில் பயன்படுத்திய டெர்ராபின் எனப்படும் இந்த ஆமை நல்சுவை மற்றும் அதிகமான ஊட்டச்சத்து நிறைந்து உயர்ரகமான உணவுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது எனவும் அதில் குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்த உணவை மக்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதால் ஹெபடைடிஸ், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இது போன்ற மற்ற நோய்களைக் குணப்படுத்த உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் அரசு மருத்துவர்கள் தயாரித்துள்ள தேநீரானது, மக்களுக்கு பசியை கொடுக்காமல், 40 நாளில் 10 கிலோ உடல் எடையை குறைக்கவும் இதனை பயன்படுத்தி வரலாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.