Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு… பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு…!!!!

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சீனா கொரோனா தொற்றில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக கொரோனா தொற்றை ஒழிக்க அதிபர் ஜின்பின் தலைமையிலான அரசு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் விரக்தி அடைந்த மக்கள் கடந்த மாதம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவில் இது போன்ற அரசு எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் அரிது என்ற காரணத்தினால் இந்த போராட்டம் சீன அரசுக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்தது.

இந்நிலையில் மக்களின் கோபத்தை தணிக்க சீன அரசு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அந்த வகையில் இனி மக்களின் பயணங்கள் அரசால் கண்காணிக்கப்படாது எனவும் மக்கள் தங்களது பயணங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மக்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்கின்றார்களா? என்பது குறித்து செல்போன் செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |