சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில் கடந்த 24-ஆம் தேதி கொரோனா பரவலுக்கு எதிராக அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த போராட்டம் கடந்த 28-ஆம் தேதி தலைநகர் பிஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டதால் போராட்டம் முடங்கியது.
நேற்று முன்தினம் எந்த பகுதியிலும் போராட்டம் நடைபெறவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று சீனாவின் குவாங்சூ நகரில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடிய மக்களை கலைக்க போலீசார் முயற்சி செய்தபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. மேலும் போராட்டக்காரர்கள் கண்ணாடி பாட்டில்கள் போன்றவற்றை போலீசார் மீது வீசி எறிந்ததை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதாகவும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.