Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துங்க…. கேரளாவுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்…!!!

கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருப்பது கவலையளிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் கேரளா மாநிலத்தில் பாதிப்பு அதிக அளவிலேயே உள்ளது. கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 32,801 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது கவலை அளிப்பதாக கூறியுள்ளார். ஓணம் பண்டிகைக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மாநிலங்களில் கட்டுப்பாட்டு மண்டலங்களை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த கட்டுப்பாட்டு மண்டலங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கேரள மாநில தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Categories

Tech |