சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளத்தில் உள்ள சாஸ்தா கோவில்கள் மிகவும் பழமை வாய்ந்ததும் பெருமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற கோவிலுமாகும். பத்தனம்திட்டை மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள சபரிமலை என்ற மலை மீது பெருமை வாய்ந்த இந்த கோவில் அமைந்திருக்கின்றது. எல்லா மதத்தை சார்ந்தவர்களும் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து கொள்ளலாம். மேலும் கோவில் சன்னிதானத்திற்கு மிக அருகில் கிழக்குப் பக்கமாக வாவர் என்பவருக்கான ஒரு இருப்பிடம் அமைந்துள்ளது. வாவர் நடை என அறியப்படும். இந்த இடம் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. இந்த கோவிலின் மற்றொரு தனித்தன்மை என்னவென்றால் வருடம் முழுவதும் இந்த கோவில் திறந்திருப்பதில்லை என்பதுதான். மண்டல பூஜை, மகர விளக்கு, விசு காலங்களில் ஒவ்வொரு மலையாள மாதத்தில் முதல் நாள் என்றும் மட்டுமே சபரிமலை கோவில் தரிசனம் செய்ய முடிகிறது மேலும் சபரிமலை தரிசனத்திற்கு செல்கின்றவர்கள்.
முன்னதாக 41 நாட்கள் விரதம் கடைபிடிக்க வேண்டும் பரம்பரை காட்டுப்பாதை வழியாகவும் பம்பை வழியாகவும் கோவிலுக்கு செல்லலாம் பம்பை வழியாக செல்வது காட்டு பாலை வழியாக செல்வது அளவுக்கு அதிகமாக இருக்காது. இந்த சூழலில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த வருடம் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜையின் போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரான பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள். இந்த வருடம் சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கான முன்னேற்பாடுகள் குறித்த தேவசம்போர்டு உயர் மட்ட கூட்டம் அமைச்சர் கே ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையின்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.