கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பரவலை முன்னிட்டு ஹாங்காங் நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரியில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் ஹாங்காங் செல்வதற்கு இரண்டு வார கால தடை விதிக்கப்பட்டது. உலக நாடுகளில் ஏற்பட்ட தொற்று காரணமாக இந்த தடை அமலுக்கு வந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய 8 நாடுகளை சேர்ந்த விமான பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பரிசோதனை செய்து அதில் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் அங்கு வர அனுமதிக்கப்படுவார் என ஹாங்காங் நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்” ஹாங்காங் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விமான சேவையின் குறைந்த அளவிலான தேவை ஆகியவற்றை முன்னிட்டு ஏர் இந்தியா விமானத்தை ரத்து செய்கிறது என தெரிவித்துள்ளது. 19ந்தேதி மற்றும் 23ந்தேதி ஹாங்காங்கில் இருந்து நாடு திரும்பும் ஏர் இந்தியா விமான சேவையும் ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.