Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க கட்டியே ஆகனும்… இனி எதுவும் திறக்க கூடாது… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நெறிமுறையை மீறிய தனியார் பல்பொருள் நிறுவனங்களிடம் அதிகாரிகள் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா  பரவல் அதிகரித்து வருவதால் தற்போது தொற்று தடுப்பு நெறிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று உறுதி செய்ய கண்காணிப்பு ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அஸ்தம்பட்டி உதவி ஆணையாளர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் செரி ரோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த இரண்டு தனியார் பல்பொருள் விற்பனை அங்காடிகளிடம் தலா 5 ஆயிரம் என மொத்தம் 10 ஆயிரம் விதித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |