ரஷ்யாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காதல் ஜோடிகள் உதட்டோடு உதடாக முத்தமிட்டு போராட்டம் நடத்தினர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதிலும் குறிப்பாக ரஷ்யாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதனால் அந்நாட்டு அரசு அதிக கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில் அந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட ஜோடிகள், உதட்டோடு உதடாக முத்தமிட்ட போராட்டம் நடத்தியுள்ளனர். இது ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.