சபரிமலையில் பக்தர்களின் வரத்து அதிகரித்துள்ளதால் தேவசம் போர்டு கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் சபரிமலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பம்பையில் குளிக்க, நீலி மலை பாதையில் பயணம் செய்ய, சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது. நெய் அபிஷேகத்துக்கான தடை நீடிக்கும் என்றும் விரைவில் அந்த தடை நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Categories