Categories
உலக செய்திகள்

நிரம்பி வழியும் மருத்துவமனை…. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள்…. கவலையில் பிரபல நாட்டு சுகாதாரத்துறை….!!

சுவிட்சர்லாந்தில் சுகாதாரத்துறையானது கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அதிகப்படியான கர்ப்பிணி பெண்கள் சேர்க்கப்படுவது மிகவும் கவலை அளிப்பதாக கூறி உள்ளது.

சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கபட்ட கர்ப்பிணி பெண்கள் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக  அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதில் பலர் அறுவை சிகிச்சை பகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களின் எண்ணிக்கையானது நான்காவது அலையின் போது அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இவர்களுள் சில கர்ப்பிணி பெண்கள் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மருத்துவர்கள், ஆரோக்கியமான கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்றானது ஏற்படாது என கூறியுள்ளார்கள். இதனிடையில் இறப்பு விகிதங்களானது, குறை பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் அதிகமாகும் என சுவிஸ் நாட்டு  சுகாதாரத்துறை தெரிவிக்கின்றது.

Categories

Tech |