கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் வகை மாத்திரைகள் கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஜிஎஸ்கே நிறுவனத்தின் தயாரிப்பான கால்பால் மாத்திரைகள் கடந்த 2021-ஆம் ஆண்டில் 310 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் டோலோ 650 மாத்திரைகள் அதே ஆண்டில் 307 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனையாகி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த மாத்திரை கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 350 கோடி டோலோ 650 மாத்திரைகள் விற்பனையாகியுள்ளதாக ஐக்கிய நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா காலக்கட்டத்தில் விற்கப்பட்ட அனைத்து டோலோ 650 மாத்திரைகளையும் அடுக்கி வைத்தால் அது துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கல்ஃபாவை விட உயரமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு காலகட்டத்தில் கூகிளில் அதிகமாக தேடப்பட்ட மாத்திரைகளில் ஒன்று டோலா 650 மற்றும் CALPOL 650 மாத்திரைகள் இடம்பெற்றுள்ளது.