Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்”….. நிவாரண திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு….!!!!!

கொரோனா காலகட்டத்தில் பாதிப்புக்குள்ளான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரண திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் அவர்களுக்கு கோவிட் உதவி மற்றும் நிவாரண திட்டம் மூலமாக ரூபாய் 25 லட்சம் வரை மானியம் பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கோவிட் உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் புதிய திட்டம் ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஓர் ஆண்டுக்கு செயல்படுத்த அரசு அறிவுடைத்திருக்கிறது.

இத்திட்டமானது கேர் 1 மற்றும் கேர் 2 என இரு கூறுகளை கொண்டுள்ளது. கேர் 1 திட்டத்தின் படி 2021 மற்றும் 2022 உள்ளிட்ட இரண்டு வருடங்களில் கொரோனா தொற்றால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் மீண்டும் நிறுவனத்தை உருவாக்க அல்லது வேறு தொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடன் திட்ட மூலம் நிதி உதவி பெறலாம். இதில் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை இருக்கலாம். கேர் 2 திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாடு, நவீனமயமாக்கல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அதிகபட்சமாக 25 லட்சம் வரை மானியம் பெறலாம். இதற்கான விண்ணப்பங்களை www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |