Categories
தேசிய செய்திகள்

கொரோனா காலத்தில் கட்டிட வேலை…. இது குப்பைக்கு நிகரானது – ராகுல் விமர்சனம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு சொகுசு வீடு ரூபாய் 13,450 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த வீட்டிற்கு ஆகும் செலவை வைத்து 45 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே விமர்சித்தார். இந்நிலையில் கொரோனாவால் நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசுதனது கட்டிடங்களை புதுப்பிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இது குப்பைக்கு நிகரானது. இது கிரிமினல் குற்றம். பொதுமக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துங்கள் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார்.

Categories

Tech |