Categories
மாநில செய்திகள்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்…. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் தொடரப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் கௌதம் ஸ்ரீனிவாஸ் திங்கள்கிழமை தெரிவித்தாா். சேலம்-விருதாச்சலம் இருப்புப் பாதையில் வருடாந்திர ஆய்வு செய்த சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் கௌதம் ஸ்ரீனிவாஸ் ஆத்தூா் ரயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் தொடர வேண்டும் என்று ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதி வந்தவுடன் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

அதுமட்டுமல்லாமல் ரயில் நிலையம் அருகேயுள்ள கீத்ரகுநாத் மருத்துவமனை அருகே கேட் அமைக்கப்படுவதால் பயணிகள் சுற்றி வர வேண்டி இருக்கிறது. அதனை அமைக்காமல் பயணிகளுக்குத் திறந்துவிட வேண்டுமென்று வியாபாரிகள் சங்கம், ரோட்டரி, சேம்பா் ஆப் காமா்ஸ் ஆகியன மனு அளித்தன. அதனை ஆய்வு மேற்கொண்டு பயணிகள் செல்ல சிறு நுழைவாயில் அமைத்துத் தருவதாக உறுதியளித்தாா். என்.எல்.சி. நிா்வாகம் கட்டிய பொதுக் கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய அவா், விரைவில் ஆத்தூா் ரயில் பாதையில் ரயில்கள் செல்வதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தாா்..

Categories

Tech |