Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… இந்த 3 உணவுப் பொருள் போதும்… கட்டாயம் சாப்பிடுங்க..!!

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே நாம் வெளியில் செல்லும் போது முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவேளையை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதேசமயம்,தொற்றுநோய்களை எதிர்த்து போராடும் அளவுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை நாம் உட்கொள்ளவேண்டும்.

அப்படி நாம் சேர்த்துக்கொள்ளவேண்டிய முக்கியமான மூன்று உணவுகளை பற்றி இதில் பார்ப்போம்.

இஞ்சி: சளி மற்றும் தொண்டை வலிக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இது செரிமானம் மற்றும் இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சில ஆராய்ச்சிகளின்படி, இஞ்சி புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை நீங்கள் தேநீர், சூப் ஆகியவற்றில் சேர்த்து தினமும் உட்கொள்ளலாம்.

பூண்டு: இயற்கையாகவே ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருள் என்றால் அது பூண்டு. இவை உணவுகளில் கூடுதல் சுவையை சேர்கின்றது. இதை தவிர, பூண்டு இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும், பூண்டு ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது. இது உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

இலவங்கப்பட்டை:  உணவில் சுவையான வாசனையைச் சேர்ப்பதைத் தவிர, இலவங்கப்பட்டை ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மசாலா பொருளாகும். இது உடலுக்குள் பாக்டீரியாக்களின் பெருக்கத்தைக் குறைக்கும், எனவே, தொண்டை புண்ணுக்கு இவை ஒரு சிறந்த தீர்வாக செயல்படுகிறது. இலவங்கப்பட்டை இதய நோய்க்கான அபாயத்தையும் குறைப்பதாக அறியப்படுகிறது. மேலும் இது இன்சுலின் என்ற ஹார்மோனின் உணர்திறனை மேம்படுத்துவதால், நீரிழிவு எதிர்ப்பு விளைவைக் ஏற்படுத்துகிறது.

Categories

Tech |