Categories
உலக செய்திகள்

கொரோனா காலத்தில் பிரிந்த காதல் ஜோடி … ஒரே சமயத்தில் ப்ரொபோஸ்… வீடியோவை வெளியிட்ட போட்டோகிராஃபர்..!!

கனடாவை சேர்ந்த காதல் ஜோடி கொரோனாகாலத்தில் பிரிந்தநிலையில்,  போட்டோஷூட் மூலமாக  ஒருவரையொருவர் ஆச்சரியப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

கனடா நாட்டை சேர்ந்த சரத் ரெட்டி- சவி நுகாலா என்ற காதல் ஜோடி,மிராண்டா  ஆண்டர்சன் என்ற போட்டோகிராபரை ஒப்பந்தம் செய்தனர் .  இதற்கு போட்டோகிராஃபர் சம்மதித்து ,வான்கூவர் என்ற இடத்தில் ஏற்பாடு செய்துள்ளார். இந்த போட்டோஷூட் எடுப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன் சவி நுகாலா  போட்டோகிராபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் என்னுடைய காதலனுக்கு ப்ரொபோஸ் செய்ய உள்ளதாகவும், அதை நீங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

இது பற்றி என்னுடைய காதலர் சரத்திடம் கூற வேண்டாம், என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு போட்டோகிராபர் சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் போட்டோஷூட்எடுப்பதற்கு  இரண்டு நாட்களுக்கு முன் மிரண்டாவை, சரத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இவர் தன் காதலி கூறியது போலவே,  சவி நுகாலாக்கு ப்ரொபோஸ் செய்யப்போவதாகவும் ,இது நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளவும் ,என்று போட்டோகிராபர் இடம் தெரிவித்தார். இவர்  கூறியதை  கேட்ட  உடனே, போட்டோகிராஃபர்  மிரண்டா எதையும் தெரிவிக்காமல் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்தார்.

இதன்பிறகு போட்டோ ஷூட் தினத்தன்று மிரண்டா போட்டோவிற்கு போஸ் கொடுக்க இருவரையும் முதுகுப்புறம் திரும்பி நிற்குமாறு செய்தார். இருவரும் அவர் சொன்னவாறே திரும்பி நின்று கொண்டு, இருவரும்  ப்ரபோஸ் செய்ய தயாராக இருந்தனர். இந்நிலையில் இருவரும் திரும்பி ,ஒருவரையொருவர் ப்ரொபோஸ் செய்துகொண்டது அந்த போட்டோகிராபரை ஆனந்தக் கண்ணீர் மிதக்க செய்தனர். இதைத் தெரியாது காதல் ஜோடிகளும்  மோதிரத்தை மாற்றிக்கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்தினர். இவனை இந்த போட்டோகிராஃபி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு  தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Categories

Tech |