கொரோனா நெருக்கடி காலத்தில் உலக நாடுகளில் பல தடைகளை சந்தித்த போதும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
அசோகச்சர் அமைப்பின் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர திரு.மோடி இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாற தொழில்துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். தன் நிறைவு நாடாக மாறுவதில் மற்றும் சவால் இல்லை என்றும் அதனை எவ்வளவு காலத்தில் அடைகிறோம் என்பதே முக்கியம் என்றும் தெரிவித்தார். மற்றொரு தொழில் புரட்சிக்கு உலகம் தயாராக வருவதாகவும் அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தியா குறித்து உலக நாடுகளின் பார்வையை மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாற்றி உள்ளதாகவும் கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். கொரோனா நெருக்கடியின் போது உலக நாடுகள் பல தடைகளை சந்தித்ததாகவும் ஆனால் இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரித்ததாகவும் கூறினார். இந்திய பொருளாதாரத்தில் உலக நாடுகள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் நம்பிக்கை வைத்திருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.