அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் ராம மனோகர் லூகியா மருத்துவமனையின் நிறுவனம் தினம் கொண்டாட்டமும் பட்டமளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. அதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்டாவியா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா தொற்று பரவலை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளும் என்று உலக நாடுகள் சந்தேகம் எழுந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் தன்னலம் கருதாமல் பொதுநலத்துடன் பணியாற்றினர். அதுமட்டுமில்லாமல் பொதுமுடக்க விதிகளையும், சுகாதார அமைச்சக அறிவுறுத்தல்களை மக்கள் அனைவரும் முறையாக பின்பற்றினர். அதனால் தான் தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து நாட்டை வளர்ச்சியடைய செய்வதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அடுத்த 25 ஆண்டுகளுக்கான சுகாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளது. அந்த கொள்கைகள் மருத்துவப் பணியாளர்களுக்கு பெரும் வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமில்லாமல் நாட்டு மக்களுக்கு சிறந்த முறையில் சேவை ஆற்றவும் வழி வகுக்கும். இதனையடுத்து அனைவரும் மலிவான சுகாதார வசதிகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும் மருத்துவ வசதிகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.