Categories
உலக செய்திகள்

கொரோனா கால முறைகேடு… தேர்தலில் கடும் பின்னடைவு… அதிர்ச்சியில் ஏஞ்சலா மெர்க்கலின்..!!

ஜெர்மனியில் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்துவ ஜனநாயக கட்சி கடும் பின்னடைவை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் 16  ஆண்டுகளாக சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின்  அதிபராக இருந்து வருகிறார். சமீபத்தில் மெர்க்கலின் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் கோட்டையாக விளங்கிய பேடன் வூர்ட்டம்பேர்க், ரைன்லேண்ட்- பழண்டினேட் மகாணங்களில் தேர்தல் நடைப்பெற்றது.  அத்தேர்தல்  வாக்குப்பதிவுக்கு பின்பு  நடந்த கருத்துகணிப்பில் மெர்க்கலின் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து கணிப்பின் முடிவின் படி கீரின் கட்சிக்கு  பேடன் வூர்ட்டம்பேர்க் மாகானத்தில்  31.5 சதவீத  வாக்கும் ,SPD கட்சியானது,  ரைன்லேண்ட்- பழண்டினேட் மாகானத்தில்லிருந்து  33 சதவீத வாக்குகளை  கைப்பற்றும் என கூறப்படுகிறது. இந்த சரிவுக்கு காரணம் கொரோனா தடுப்பூசி வழங்குவதில்  தோய்வு ஏற்பட்டது என்றும்  மாஸ்க் கொள்முதலில் ஊழல்  இருப்பதாக  சொல்லபடுகிறது. மெர்க்கலின் கட்சி தொண்டர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |