Categories
தேசிய செய்திகள்

கொரோனா குறித்து தவறான செய்திகளை பரப்பாதீங்க… மீடியாக்கள், சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!

நாட்டில் உள்ள அனைத்து அச்சகங்கள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவை வலுவான பொறுப்புணர்வை தக்க வைத்து கொள்ளவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக பீதியடையும் வகையில், சரிபார்க்கப்படாத தவறான செய்திகளை பரப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 133 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு மேலும் மோசமாக பரவாமல் தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று சம்பந்தமாக போலி செய்திகள் மிகப்பெரிய தடையாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.

அப்போது, நிபுணர்களின் குழுவையும், கொரோனா வைரஸ் குறித்த தகவல்களுக்கான போர்ட்டலையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில், சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்பவில்லை என்பதை ஊடகங்கள், அச்சகங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வால், “ஊடகங்கள் பரப்பும் தவறான தகவல்களை சரிபார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவிக்க நாங்கள் [email protected] என்ற மின்னஞ்சல் ஐடியை உருவாக்கியுள்ளோம் என தெரிவித்தார். இதன் மூலம் சுகாதார அமைச்சின் இணை செயலாளர் மற்றும் எய்ம்ஸின் சிறப்பு மருத்துவர்கள் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவார்கள் என அவர் கூறினார்.

Categories

Tech |