Categories
உலக செய்திகள்

கொரோனா குறித்த ஆய்வுக்குழு… வெளியாகும் அறிக்கை… உலக சுகாதார அமைப்பு…!!!

உலகம் முழுவதிலும் கொரோனாவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட உலக சுகாதார அமைப்பு ஒரு குழுவை நியமனம் செய்துள்ளது.

உலக சுகாதார அமைப்பால் நியமனம் செய்யப்பட்ட சுயாதீன குழு, அடுத்த வருடம் சுகாதார நிறுவனம் மற்றும் கொரோனா தாக்கத்திற்கான பதிலை உலக அளவில் மறு ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிடும் என கூறப்படுகின்றது. அந்த குழுவின் தலைவராக முன்னாள் லைபீரியா அதிபர் எலன் ஜான்சன் மற்றும் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதுகுறித்து லைபீரிய முன்னாள் அதிபர் கூறுகையில், ” கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 கோடிக்கும் அதிகமான மக்களையும், கொரோனாவால் உயிரிழந்த 8 லட்சத்திற்கும் மேற்பட்டோரையும் நாம் அனைவரும் மதிக்க வேண்டும்.

இந்தக் குழுவும் செப்டம்பர் 17 மற்றும் ஒவ்வொரு ஆறு வாரங்களுக்கு ஒரு முறை ஏப்ரல் மாதம் வரையில் சந்திப்பு நடத்தும். இந்தக் குழுவின் அறிக்கை நவம்பர் மாதத்தில் உலக அளவில் சுருக்கமாகவும், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இறுதி அறிக்கையும் வெளியிடப்படும்” என்று அவர் கூறியுள்ளார். இந்தக் குழுவில் மேலும் 11 உறுப்பினர்கள் நேற்று இணைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் மனிதனிலிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுமா என்பதை முதன் முதலாக கண்டறிந்த சீன மருத்துவர் ஜாங் நன்ஷான், மற்றும் எய்ட்ஸ், காசநோய், மலேரியாவை சமாளிக்க உலகளாவிய நிதியத்தின் தலைவராக இருந்த மார்க் டைபுல் ஆகியோரும் இந்த குழுவில் அடங்கியுள்ளனர்.

Categories

Tech |