பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கொரோனா குறித்த தகவலை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த zhang shan (37) என்ற பெண் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் குறித்த உண்மையை வெளியிட்டுள்ளார். இதனால் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. இதுபோன்று விசாரணைக்கு உட்படுத்துவதில் இவரே முதல் நபர் ஆவார்.
மேலும் விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் இவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் zhang தனக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை மேல் முறையீடு செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் இதுபோன்று சீனாவில் கொரோனா பாதிப்பு குறித்து செய்திகளை தனிப்பட்ட முறையில் வெளியிட்ட பலர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் zhangற்கு முதல் நபராக விசாரணை நடத்தப்பட்ட தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.