Categories
மாநில செய்திகள்

கொரோனா குறைந்தாலும் நாங்கள் குறையவில்லையே… முதல்வர் பெருமிதம்…!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் கொரொனா பரவத் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தினசரி 70 ஆயிரத்தை கடந்து சென்றது.

தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனை மேலும் நீட்டிப்பது பற்றி தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் பிற மாநிலங்களில் கொரோணா பரிசோதனை குறைந்தாலும்,தமிழகத்தில் இன்னும் குறைக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி பெருமையுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |