நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக செய்தி வெளியானதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொட்டுப் பரவுதல் கட்டுக்குள் வந்து விட்டதாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நாட்டின் கொரோனா தொற்று குறைய வில்லை என்பதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு இதுவரை முழு ஊரடங்கு அமல் படுத்துவதற்கான என்ன ஒரு யோசனையும் இல்லை. டிசம்பர் மாதத்தில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என கூறியுள்ளது.