Categories
தேசிய செய்திகள்

கொரோனா கோரப்பிடியில் டெல்லி…. ஓய்வின்றி எரியும் மயானங்கள்…. ஒலிக்கும் மரண ஓலங்கள்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். ஒருசில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிளை திருப்பி அனுப்பும் அவலமும் அரங்கேறி வருகிறது.

மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனை வாசல்களில் நோயாளிகள் காத்து கிடக்கின்ற அவலம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆக்சிஜனுக்காக ஏங்கும் மோசமான நிலை டெல்லியில்  உருவாகிவிட்டது. இதனால் தலைநகர் டெல்லி கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளதால் மயானங்கள் ஓய்வின்றி எரிந்து கொண்டிருக்கின்றன. ஒரே மயானத்தில் 24 நாட்களில் 900 சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இதனால் எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள் ஒலித்து கொண்டிருக்கிறது.

 

Categories

Tech |