தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இதனை சரி செய்ய தமிழக அரசு கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 க்கும் அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை 90 க்கும் கீழே குறைந்து இருந்தால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கலாம். சுய தனிமையில் இருப்பவர்கள் உட்பட அனைத்துப் பிரிவு கோரோனோ நோயாளிகளும் குப்புறப்படுப்பதை வழக்கமாக வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.