Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை கடன்…. பிரபல வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கோடாக் மகேந்திரா வங்கி கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு கடன் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதில் தனி நபருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப் படுகின்றது. இந்தத் திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை கடன் பெறலாம். அதற்கு ஆண்டுக்கு 10% மட்டுமே வட்டி. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் கொரோனா சிகிச்சைக்கான செலவு களை அல்லது குடும்பத்தாரின் சிகிச்சைக்கான செலவுகளை பார்த்துக் கொள்ள முடியும்.

இந்த கடன் தொகையை 4 ஆண்டுகள் கால வரம்பு இல் வழங்கலாம். வாங்கும் கடலில் ஒரு சதவீதத்தை மட்டும் செயல்பாட்டு கட்டணமாக வழங்கினால் மட்டுமே போதும். அதுமட்டுமல்லாமல் சிகிச்சைக்கான மருந்துகளை வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம். அதற்காக மெடிபடி, டாடா 1எம்ஜி உள்ளிட்ட மருந்து நிறுவனங்களுடன் கோடக் மகேந்திரா வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி 17 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகளை வாங்க முடியும் என்பது மட்டுமல்லாமல் 5% கேஷ்பேக் சலுகையும் உள்ளது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |