அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பயன்படுத்திவரும் ரெம்டிசிவர் மருந்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக மைலான் நிறுவனம் தெரிவித்துள்ளது :
கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டிசிவிர் மருந்தை இந்தியாவில் 100 மில்லி கிராம் 4800 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப் போவதாக அமெரிக்காவின் மைலான் நிறுவனம் அறிவித்துள்ளது கொரோனாவுக்கு எதிராக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த மருந்தும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் இந்தியாவில் ஹைட்ராக்ஸி குலோராக்குவின் மருந்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று ரெம்டிசிவிர் என்ற மருந்தை அமெரிக்கா பயன்படுத்திவருகிறது. அமெரிக்காவின் கைலீட் மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரெம்டிசிவிர் மருந்து கொரோனா சிகிச்சையில் சிறப்பான பலனை அளிப்பதாக கூறப்படும் சூழலில். உலக அளவில் அதற்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ரெம்டிசிவிர் மருந்தை அமெரிக்காவின் மைலான் பார்மா நிறுவனம் டேஸ்ரம் என்ற பெயரில் அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் இந்தியாவில் 100 மில்லிகிராம் மருந்தை 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மருந்தை தயாரித்து விற்க அனுமதி பெற்றுள்ள இந்திய நிறுவனங்களான சிப்லா, ஐட்ரோ மருந்தின் விலை 5 ஆயிரத்து 400 என்று நிர்ணயித்து உள்ள நிலையில் அதைவிட குறைந்த விலையில் மைலான் பார்மா நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.